
மீண்டும் அஜய் ஞானமுத்து படம் : உறுதிப்படுத்திய விக்ரம்
அப்போது பேசிய விக்ரம், ‛‛நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன். "கோப்ரா" படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு அந்நியன் பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது. அதைத்தாண்டி சயின்ஸ் பிக்சன் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும்.
அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப்படமும் மிக வித்தியாசமாக செய்துள்ளார். படம் மிக ப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள். அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அதை முடித்ததும் மீண்டும் அஜய் ஞானமுத்து உடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படம் ரசிகர்களை உலகளவில் கவரும் கதையாக இருக்கும்"".
இவ்வாறு விக்ரம் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!