
போக்சோ சட்டத்தில் ‛கும்கி நடிகர் கைது
கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற சிறுமியர்கள் முன்பு காரில் இருந்தபடி தனது ஆடையை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். ஆனால் அந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சிசிடி காட்சிகளின் அடிப்படையில் காரை அடையாளம் கண்ட போலீசார் அந்த நபர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிப்பட்டதை தொடர்ந்து குழந்தைகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ஸ்ரீஜித் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளாராம். கடந்த 2016ம் ஆண்டும் இதே மாதிரியான வழக்கு ஒன்றில் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!