
ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை
அந்தவகையில் இந்த யானை படத்திலும் ஹரியின் முந்தைய படங்களின் காட்சிகளையே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் அதேசமயம் ஹரியின் முந்தைய படங்களை போன்ற விறுவிறுப்பு இதில் குறைவாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் பரவலாக கருத்து கூறி வந்தனர். இந்த நிலையில் இந்தப்படத்தில் ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளது என்றும் நேற்று முதல் புதிய யானை தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த ஐந்து நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன என்பதை படக்குழுவினர் வெளியிட மறுத்து விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!