
டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா
அந்த வகையில் நடிகை டாப்சியும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அடுத்ததாக தான் தயாரிக்க உள்ள படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார் டாப்ஸி.
சமந்தாவைப் பொறுத்தவரை பாலிவுட்டுக்குள் அடி எடுத்து வைத்தாலும் வெப்சீரீஸ் பக்கமே தற்போது அவரது கவனம் இருக்கிறது. ஏற்கனவே பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் நடித்த சமந்தாவுக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதே ராஜ் மற்றும் டிகே. இரட்டை இயக்குனர்களின் மற்றொரு வெப்சீரிஸில் தற்போது நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!