
நலமாக இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் தகவல்
இந்நிலையில் சில நாட்களாக, ஸ்ருதி ஹாசன் உடல்நிலை மோசமடைந்து, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அபாய கட்டத்தில் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து, ஸ்ருதி நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:ஹைதராபாதில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, என் உடல்நிலைப் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகின்றன. பெண்களுக்கு பரவலாக ஏற்படுகிற பிரச்னை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நான் தற்போது நலமாக உள்ளேன். எனக்கு எந்த பிரச்னையும் பெரிய அளவில் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!