
பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி
அதன்பின் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்காமலே இருந்தார். கடந்த சில வருடங்களாக இயக்கத்தில் ஈடுபடாத பாலா, சூர்யாவின் 41வது பட இயக்குனராக அறிவிக்கப்பட்டார். அது சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்வைத் தந்தது. அதே சமயம் சூர்யாவும், பாலாவும் இந்தப் படத்தை பிரச்சினையில்லாமல் கொண்டு செல்வார்களா என்ற சந்தேகமும் திரையுலகத்தில் நிலவியது. "நந்தா" படத்தில் நடித்த சூர்யா வேறு, இப்போது இருக்கும் சூர்யா வேறு என்பதே அதற்குக் காரணம்.
அதற்கேற்றால் போல முதற்கட்டப் படப்பிடிப்பின் முடிவில் இயக்குனர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் சண்டை. அதனால், சூர்யா கோபித்துக் கொண்டு போய்விட்டார் என்ற வதந்தி தீயாகப் பரவியது. கடந்த சில நாட்களாக அப்படம் டிராப்பாகி விட்டது என்பது பெரிய செய்தியாகவே இருந்தது.
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு மற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த சூர்யா, “மீண்டும் செட்டுக்குப் போகக் காத்திருக்கிறேன்…சூர்யா 41” என டுவிட்டரில் பதிவிட்டு வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!