
லத்தி இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால்
இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். ஆனால், இயக்குனருக்குத் தெரியாமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, நடிகர் சங்க விவகாரங்களில் ரமணா, நந்தா ஆகியோரது பேச்சைத்தான் விஷால் கேட்பதாக முன்னர் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதனால், விஷால் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் "லத்தி" பட அறிவிப்பு விவகாரத்தில் படத்தின் இயக்குனருக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால், நந்தா, ரமணா. படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் இயக்குனரான வினோத்குமார் அவரது டுவிட்டர் பதிவில் கூட பகிரவில்லை. படத்தின் வேலைகளை வினோத்குமார் தொடர்ந்து பார்ப்பாரா அல்லது விஷாலும், அவரது நண்பர்களுமே பார்ப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!