
ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார்
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை மையமாக வைத்து "திஷா என்கவுன்டர்" என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த கே.சேகர் பாபு என்பவரிடம் 56 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த பணத்தை படம் வெளிவரும்போது தந்து விடுவதாக சொன்ன ராம்கோபால் வர்மா சொன்னபடி திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து மியாபூர் போலீசில் ராம் கோபால் வர்மா மீது சேகர் பாபு பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ராம்கோபால் வர்மா மீது போலீசார் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!