
ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ்
இதுகுறித்து அவர் எழுதியிருப்பதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், நான், என் குடும்ப நண்பர் ஜெஸ்னா, அவருடைய இரண்டு மகள்களுடன் மிலானாவில் இருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். கொச்சி துறைமுக போலீஸார் எங்களை நிறுத்தி கேள்வி கேட்டனர்.
நாங்கள் அனைவரும் பெண்கள். எங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்கள் கேள்வி கேட்டதில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. நாங்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்றதும் ஏன் வீட்டுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள் விசாரித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. அது அவர்கள் கடமை. ஆனால், கேள்விகேட்ட முறை, சரியானதாக இல்லை.
எந்த வாகனத்தில் வருகிறோம் என்பதை வைத்து போலீஸார், மக்களை எடை போடக் கூடாது. கணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எங்கள் மீது சந்தேகமடைந்து வீடுவரை பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் அணுகுமுறையும் நடந்துகொண்ட விதமும் மோசமான அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அர்ச்சனா கவி எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்கவில்லை. தனது இந்த பதிவை கேரள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!