மாடு பிடித்து வந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த சூர்யா
ஏப் 14, 2022
Advertisement
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் பாலா இயக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படங்கள் தயாராகி வருகின்றன. இவற்றில் பாலா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மீனவ பிரச்னை தொடர்பான இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நடக்கிறது.
இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் இருக்கும் சூர்யா தனது அடுத்த படமான ‛வாடிவாசல்" படத்திற்கும் தயாராகி வருகிறார். அதாவது ‛வாடிவாசல்" படம் ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு காளை தொடர்பான கதை என்பதால் காளைகளுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாலா படத்தில் இருக்கும் சூர்யா, ஓய்வு நேரத்தில் மாடு ஒன்றை பிடித்தபடி ‛என் தமிழ் - இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வைரலானது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!