தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி : தாமரை பரிசளித்த ரசிகர்கள்
Advertisement
Advertisement
தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினி : தாமரை பரிசளித்த ரசிகர்கள்
ஏப் 14, 2022
அ நிறம் | அளவு
Advertisement
நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி, பொங்கல் புத்தாண்டு என முக்கிய நாட்களில் தனது வீடு முன்பு கூறும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்தவகையில் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவர் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடினார்கள். அதையடுத்து ரஜினி ரசிகர்களை சந்தித்து, தனது கைகளை அசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அப்போது ரசிகர்கள் அவருக்கு சால்வை மற்றும் தாமரை மலரையும் பரிசாகக் கொடுக்க, அதையும் ரஜினி வாங்கிக் கொண்டார். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!