முன்பதிவில் முதலிட சாதனையைப் பிடித்த கேஜிஎப் 2
ஏப் 14, 2022
Advertisement
இந்திய அளவில் மிகப் பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கான முதல் நாள் முன்பதிவு, விடுமுறை நாள் முன்பதிவு ஆகியவை சிறப்பாக இருக்கும். இதுவரையில் ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் முன்பதிவு மூலம் 37 கோடி ரூபாயை வசூலித்து முதலிடத்தில் "பாகுபலி 2" படம் இருந்து வந்தது.
அந்த சாதனையை இன்று வெளியாகி உள்ள "கேஜிஎப் 2" படம் முறியடித்துள்ளது. இப்படத்திற்கு முன்பதிவு மூலம் மட்டுமே 39 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. தற்போது முதலிரண்டு இடங்களையும் பிடித்திருப்பது தென்னிந்தியப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட "பாகுபலி 2" படம் வந்த பிறகு ஹிந்திப் படங்களின் வியாபாரம் மற்றும் வசூலை அப்படம் பின்னுக்குத் தள்ளியது. இப்போது ஹிந்திக்கு டப் செய்யப்பட்டு வெளியான கன்னடப் படமான "கேஜிஎப் 2" இந்த சாதனையைப் புரிந்திருப்பது பாலிவுட்டினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
"பாகுபலி 2, கேஜிஎப் 2" படங்கள் மூலம் தென்னிந்திய இயக்குனர்களும் தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!