
தென்காசியில் துவங்கிய கட்டா குஸ்தி படப்பிடிப்பு
செல்லா அய்யாவு என்பவர் இயக்கும் இந்த கட்டா குஸ்தி படம் மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள நாயகி ஐஸ்வர்ய லட்சுமி தென்காசி பகுதி தன்னுடைய மனதை கவர்ந்து விட்டதாகவும், தான் ஏதோ இந்த பகுதியை சேர்ந்தவர் போன்ற உணர்வு தனக்குள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!