
தென்னிந்திய சினிமாவை தவறாக பேசவில்லை ; ராஷி கண்ணா விளக்கம்
ஆனால் இந்த தகவலை உடனடியாக மறுத்துள்ளார் ராஷி கண்ணா. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்துப் பேசியதாக கடந்த சில நாட்களாக, ஒரு செய்தி சித்தரிக்கப்பட்டும் இட்டுக்கட்டியும் உருவாக்கப்பட்டு வலம் வருகிறது. நான் ஒருபோதும் அப்படி பேசியது இல்லை. நான் எந்தெந்த மொழிகளில் நடித்து வருகிறேனோ அவற்றுக்கு உரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!