
சைபர் கிரைம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுசி கணேசனின் தில் ஹே கிரே
சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) பயணமாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது, ""இந்த படத்தின் கதையும் அதன் மொத்த பின்னணியும் இன்றைய காலகட்டத்திற்கான இன்றைய வயதினருக்கான முக்கியமான ஒன்று. ஆன்லைனில் இன்று பல நிகழ்வுகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்தப்படம் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லிவிட்டு போகாமல், தற்போது மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாகவும் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த கூடிய சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் ஒரு கருவியாகவும் இருக்கும். எம்.ரமேஷ் ரெட்டி மற்றும் அனைவருடனும் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
இந்தப்படம் ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்., 14ல் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!