
‛பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை
மால் ஒன்றில் பயங்கரவாதிகள் புகுந்து மக்களை பிணைய கைதிகளாக பிடிக்கின்றனர். அவர்களை அந்த மாலில் உள்ள மாஜி ராணுவ வீரரான விஜய் எப்படி மீட்கிறார் என்பதே கதை என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்நிலையில் குவைத்தில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்து இருப்பதாலும், நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாலும் அந்நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே காரணத்தை காட்டி துல்கர் சல்மானின் குரூப், விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களுக்கும் அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!