
மகனை இயக்கும் சரண்ராஜ்
படத்தை சோனி ஸ்ரீ புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பைலட்டாக பணியாற்றிய அந்த பணியை விட்டுவிட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.
படம் பற்றி இயக்குனர் சரண்ராஜ் கூறியதாவது: ஒரு குப்பத்தில், மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம். இப்படத்தில் இரண்டு காதல் ஜோடிகள் நடிக்கவுள்ளனர். தேவ் சரண்ராஜ், சுஷ்மிதா சுரேஷ் முதன்மை ஜோடியாக நடிக்க, ஆதி தேவ் மற்றும் பிரியதர்ஷினி அருணாசலம் இன்னொரு ஜோடியாக நடிக்கின்றனர்.
சென்னை பாலவாக்கம் பகுதியில் தொடர்ந்து 45 நாட்கள் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை, ஏலகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!