
கடத்தல் கதையைக் கைவிடாத நெல்சன் திலீப்குமார்
அந்த பாதுகாப்பான வழியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் விஜய் போன்ற ஒரு ஹீரோ கிடைத்தும், அவருக்காக கதை செய்யாமல் தனக்கு எது வருமோ அதைச் செய்திருக்கிறார். நெல்சனின் "கடத்தல் கதை" என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய்யும் பணயக் கைதியாக "பீஸ்ட்" படத்தில் சிக்கியிருக்கிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நெல்சன் தான் முதலில் இயக்கிய "கோலமாவு கோகிலா" படத்தில் போதைப் பொருள் கடத்தல், இரண்டாவது படமான "டாக்டர்" படத்தில் சிறுமிகள் கடத்தல் ஆகியவற்றை வைத்து கதை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடிக்கும் "பீஸ்ட்" படத்தில் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குள் இருந்தவர்களை பணயக் கைதிகளாக கடத்தி வைத்திருப்பதை வைத்து கதை அமைத்திருக்கிறார்.
முதலிரண்டு படங்களிலும் "கடத்தல்" சமாச்சாராம் நெல்சனை வெற்றியைக் கடக்க வைத்திருக்கிறது. அந்த ராசி "பீஸ்ட்" படத்திலும் தொடருமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!