
ஆர்ஆர்ஆர் - தெலுங்கில் 200 கோடி, உலக அளவில் 800 கோடி வசூல்
தெலுங்கில் மட்டும் இப்படம் 200 கோடி வசூலையும், உலக அளவில் 800 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் இதுவரையிலும் அதிக வசூலைப் பெற்ற படமாக "பாகுபலி 2" படமாக 204 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்த வசூலை "ஆர்ஆர்ஆர்" கடந்து 210 கோடியைப் பெற்றுள்ளதாம். இவை "ஷேர்" தொகை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த வசூல் 275 கோடியைத் தாண்டியுள்ளதாம்.
கர்நாடகாவில் ஏற்கெனவே 50 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது. தமிழகத்தில் விரைவில் 50 கோடி வசூலைக் கடந்துவிடுமாம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவில் தான் குறைவாக 15 கோடியை வசூலித்துள்ளது. ஹிந்தியில் 165 கோடி வசூலைக் கடந்துள்ளதாம். வெளிநாடு வசூலும் 150 கோடியைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"பாகுபலி 2" வசூலை மற்ற இடங்களில் இப்படம் முறியடிக்கிறதோ இல்லையோ, தெலுங்கில் முறியடித்துள்ளது குறித்து படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!