
24 மணி நேரத்திற்குள் 29 மில்லியன் கடந்த பீஸ்ட் டிரைலர்
காப்பி சர்ச்சைகளை இந்த டிரைலர் ஏற்படுத்தினாலும் யு டியூபில் 24 மணி நேரத்திற்குள்ளாக 29 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையையும் இந்த டிரைலர் படைக்க உள்ளது.
விஜய் நடித்த படங்களில் இதற்கு முன்பு வெளியான டீசர்களில் "மாஸ்டர்" டீசர் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுதான் தமிழ் சினிமா சாதனையாக இருந்தது. டிரைலரைப் பொறுத்தவரையில் விஜய் நடித்த "பிகில்" டிரைலர் 24 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனை. இதை இப்போது "பீஸ்ட்" டிரைலர் முறியடித்து அதிகபட்ச பார்வைகளைப் பெற உள்ளது.
5 மொழிகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள "பீஸ்ட்" படத்தின் தமிழ் டிரைலரை மட்டுமே நேற்று வெளியிட்டனர். மற்ற மொழி டிரைலர்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!