
விஞ்ஞானியான வித்யா பிரதீப்
இதுகுறித்து தனது வித்யா பிரதீப் கூறுகையில், "கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் தான் நான் பணியாற்றி வந்தேன். நான் சென்னைக்கு எந்த காரணத்திற்காக வந்தேனோ அது நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். இதற்காக கடின உழைப்பு தீர்மானம் ஆகியவற்றை கொடுத்ததுடன் சில தியாகங்களையும் நான் செய்துள்ளேன். இப்படி ஒரு இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் எனக்கான பொறுப்பு இன்னும் அதிகரித்து இருப்பதாக உணர்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் இந்த சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பணியாற்றுவேன்" என கூறியுள்ளார் வித்யா பிரதீப்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!