
இசை அமைப்பாளர் ஆனது எப்படி? ஜெய் விளக்கம்
அவர் கூறியதாவது: எனக்கு இசை எங்கிருந்து வந்தது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். ஒரு இசை ஆல்பத்துக்காக பாடல்களை தயார் செய்தேன். அதில் ஒரு பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தபொது சுசீந்திரன் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன். அவர் ஆச்சரயப்பட்டு பாராட்டினார்.
திடீரென்று இந்தப்படத்திற்கு இசையமையுங்கள் என்று சொன்ன போது முதலில் பிராங்க் செய்கிறார் என்று நினைத்தேன். சீரியஸாக சொன்னார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் சுசீந்திரன் என்னை நம்பினார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும்போது என்னாலும் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. நான் இசை கற்றுக்கொண்டதற்கு என் குடும்பம் தான் காரணம். என் குடும்பத்திற்கு நன்றி.
இவ்வாறு ஜெய் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!