
வலிமை - மற்ற மொழி டிரைலர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு ?
அஜித் நடித்த ஒரு படம் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு மற்ற மொழிகளில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கப் போகிறது என்பது "வலிமை" படம் வெளிவந்த பிறகே தெரியும். ஆனால், அதற்கு முன்னோட்டமாக டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பொறுத்தும் ஓரளவிற்கு யூகிக்கலாம்.
படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்கள்தான் நேற்று இந்த டிரைலரை வெளியிட்டார்கள். ஹிந்தி டிரைலரை அஜய் தேவகன், கன்னட டிரைலரை சுதீப், தெலுங்கு டிரைலரை மகேஷ்பாபு ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டார்கள்.
ஹிந்தி டிரைலருக்கு இதுவரையிலும் 14 லட்சம் பார்வைகளும், தெலுங்கு டிரைலருக்கு 9 லட்சம் பார்வைகளும், கன்னட டிரைலருக்கு 2 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான தமிழ் டிரைலருக்கு இதுவரையில் 1 கோடியே 91 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!