
மீண்டும் அஸ்வின் சர்ச்சைக் கருத்து
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அவரது பட வெளியீட்டையும் தள்ளி வைக்கும் அளவிற்கு நிலைமை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ள வார்த்தைகள் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அவரது பதிவில் யார் என பெயர் குறிப்பிடாமல் "என்ன.. , பழிவாங்கறதா..? இல்லை.. நான் ரொம்பவே சோம்பேறி.. அதனால் நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்க போகிறேன்.. கர்மா உன்னை.. " என மோசமான ஓரு ஆங்கில வார்த்தையை குறிப்பிட்டு அது என்னவென்று தெரியாதபடி அழித்தும் இருக்கிறார்.. யாரையோ பழிவாங்க விருப்பமில்லாமல் அதே சமயம் அந்த நபர் மீது கோபப்பட்டு இந்த பதிவை அவர் இட்டிருந்தாலும் இவ்வளவு மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தியிருக்க தேவையில்லை என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!