
அஜித்தின் சண்டைக்காட்சியை வடிவமைத்து கொடுத்த சிவசங்கர்
“இந்தப்படத்தில் அஜித்தின் மூன்று கதாபாத்திரங்களில் பரதநாட்டிய கலைஞர் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இதை நான் சரியாக செய்ய முடியுமா, திரையில் பார்க்கும்போது இது வேறுவிதமாக தெரிந்துவிடாதே என கொஞ்சம் தயங்கினார் அஜித். அப்போது நான் அவரிடம் சிவசங்கர் மாஸ்டரை நம்பி இதை தாரளமாக செய்யலாம் என கூறினேன்.
இந்தப்படத்தின் கதாபாத்திரம் போலவே, பரதநாட்டியத்தின் காரணமாக அவரை அறியாமலேயே அந்த பெண் தன்மை வந்துவிட்டது என்றும் ஆனால் சிவசங்கருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள் என்றும் கூறினேன். அவர் மீதுள்ள மரியாதை காரணமாகவே அந்தப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு சிவசங்கர் என பெயரும் வைத்தேன்.
இந்தப்படத்தில் அஜித்தின் நடை உடை பாவனைகளை அழகாக வடிவமைத்து கொடுத்தார் சிவசங்கர். அதுமட்டுமல்ல, இந்த அஜித் கதாபாத்திரத்தை வைத்து ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியபோது, ஒவ்வொரு எதிரியையும் அஜித் அடித்து வீழ்த்தும்போது ஒவ்வொருவிதமான நடன முத்திரையை போஸாக காட்டுவது போல வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்கு பொருத்தமாக அந்த சண்டைக்காட்சியில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து கொடுத்தார் சிவசங்கர் மாஸ்டர். தியேட்டரில் அந்த சண்டைக்காட்சிக்கு ரசிகர்களின் கைதட்டல் அதிகம் கிடைத்தது” என கூறியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!