
எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையாகவே இருப்பது - யாஷிகா
இதுப்பற்றி நம்மிடம் பேசிய யாஷிகா : ‛‛இப்போது உடல்நிலை பரவாயில்லை. பழையபடி நடக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நடக்க தொடங்கிவிட்டேன். முழுமையாக குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். பிஸியோ, உடற்பயிற்சி எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எவ்வளவு நாள் தான் படுத்த படுக்கையாக இருப்பது. ஒரு மைண்ட் சேஞ்சிற்காக கடை திறப்பு விழாவில் பங்கேற்றேன். இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஒரு படத்தில் போலீசாக நடிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட விபத்தால் அந்த படப்பிடிப்பு அப்படியே நின்று உள்ளது. உடல்நிலை தேறிய பிறகு தான் அடுத்த படங்கள் பற்றி யோசிக்க முடியும்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!