
புனித் ராஜ்குமார் மரணத்தில் எழுந்த சந்தேகம் - டாக்டர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தற்போது புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில சமூக ஊடங்களும் இதுகுறித்து விவாதங்களை நடத்தி வருகிறது.
புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை தாமதிக்கப்பட்டதாகவும், உடனடி சிகிச்சை அளித்திருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், புனித்தை முதலில் பரிசோதித்த அவருடைய குடும்ப மருத்துவர் ரமணா ராவுக்கு ரசிகர்களால் ஆபத்து ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!