
அஜித் போன்ற பணிவான மனிதரைப் பார்த்ததே இல்லை - வலிமை வில்லன் கார்த்திகேயா
அஜித் நடிக்கும் "வலிமை" படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் "ராஜா விக்ரமார்கா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் "வலிமை" படம் பற்றியும், அஜித் பற்றியும் அவர் கூறியுள்ளதாவது, “எனது "உடல்" தோற்றத்தைப் பார்த்தே "வலிமை" படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. "கேங் லீடர்" படத்திலும் அந்த தோற்றத்திற்காகத்தான் எனக்கு வாய்ப்பு வழங்கியதாக அப்படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் கூறினார்.
அஜித் சார் போன்ற சூப்பர் ஸ்டார் படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இப்போதே பல தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. "வலிமை" படம் என்னுடைய கேரியருக்கு ஒரு புதிய திருப்பத்தைத் தரும் என எதிர்பார்க்கிறேன்.
முதல் நாள் படப்பிடிப்பில் நான் பதட்டத்துடன் இருந்தேன். அஜித் சார் என்னைத் தனியே அழைத்துச் சென்று என்னை சாந்தப்படுத்தினார். அதை இன்னும் அப்படியே ஞாபகத்தில் வைத்துள்ளேன். மொத்த குழுவும் என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனது வாழ்க்கையில் அஜித் சாரைப் போன்ற மிகப் பணிவான மனிதர் ஒருவரை இதுவரை பார்த்ததில்லை”.
"வலிமை" படம் 2022 பொங்கலுக்கு வெளியாகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!