
ஜெய்பீம் - நிஜ ராசாக்கண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டிக்கொடுக்கும் ராகவா லாரன்ஸ்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், செய்யாத குற்றத்திற்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமுற்றேன். பார்வதி அம்மாளுக்கு எனது சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கிறேன். பார்வதி அம்மாளின் வறுமை நிலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.
மேலும், 28 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொடூர நிகழ்வை இன்றைக்கு தமிழகம் முழுவதும் பேசு பொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவுக்கும், ஜெய்பீம் படத்தை ஒரு கலைப்படைப்பாக மாற்றிய சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுக்கும், இயக்குனர் ஞானவேல் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் என பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!