
14 வருடத்துக்கு பிறகு காப்பாற்றிய டாக்டர் : வில்லன் நடிகர் நெகிழ்ச்சி
சினிமா மீதும், நடிப்பின் மீதும் வைத்திருந்த ஆதீத காதலால் போலீஸ் வேலையை துறந்து சினிமாவில் நடிக்க முயற்சி செய்யத் துவங்கினார். கமலின் தசாவதாரம் படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை துவங்கினார்.
சிங்கம் 3, தபாங் 3, என்னை அறிந்தால், பிகில், பேட்ட, இரவுக்கு ஆயிரம் கண்கள், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சங்கத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தனது 14 வருட போராட்டத்திலிருந்து டாக்டர்தான் என்னை காப்பாற்றினார் என்கிறார் கராத்தே கார்த்திக்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கைதி படத்தில் எனது நடிப்பை பார்த்துவிட்டு டாக்டர் படத்தில் வாய்ப்பளித்தனர். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையை பார்த்து வந்த முதல் வாய்ப்பு இதுதான். தற்போது நிறைய இயக்குனர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அது இதுவரை நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டது. என் நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் கராத்தே கார்த்தி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!