
சமந்தாவின் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் இரண்டு டிவி சேனல்கள் மற்றும் 3 யூடியூப் சேனல்கள் மீது நீதிமன்றத்தில் அவதூறு புகார் அளித்தார் சமந்தா. இதனை அவசர வழக்காக கருதி முன்னுரிமை தந்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் சமந்தாவின் வழக்கறிஞர்..
அதற்கு நீதிபதி, “அவதூறு வழக்கு தொடர்வதற்கு பதிலாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற ஒரு வார்த்தையை கேட்க செய்திருக்க முடிந்திருக்குமே” என கூறியுள்ளார். மேலும் பிரபலங்கள் தங்களை குறித்த பெர்சனல் தகவல்களை எல்லாம் பொதுவெளியில் வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறார்கள். பின்னர் அவர்களே அவதூறு வழக்கும் தொடர்கிறார்கள்.. நீதிமன்றம் என்பது எலோருக்கும் சமமான ஒன்று. அதனால் சமந்தாவின் வழக்கும் வரிசைப்படி முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!