
விஜய்யின் தங்கையாக நடிக்கும் அபர்ணா தாஸ்
தற்போது அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது. கடந்த மே மாதமே இவரது காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டு இருந்ததாம்.. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அது தள்ளிப்போய், சமீபத்தில் தான் அவர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமக்கப்பட்டனவாம். இவர் ஏற்கனவே மலையாளத்தில் பஹத் பாசிலுடன் "ஞான் பிரகாசன்" மற்றும் வினீத் சீனிவாசனுடன் "மனோகரம்" என இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!