
ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய ஜீ தமிழ்
டிச 20, 2025
Advertisement
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் "ஜனநாயகன்". இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் தவிர்த்து மற்ற வியாபாரங்கள் முடிவடைந்தது. தற்போது இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைபற்றியுள்ளனர் என அறிவித்துள்ளனர். இதனை ரூ.64 கோடிக்கு கைப்பற்றி உள்ளதாக ஒரு தகவல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தி கோட் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்தையும் ஜீ தமிழ் நிறுவனம் கைபற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…