
கான்ஸ்டபிளாக நடிக்கும் யோகி பாபு: படப்பிடிப்பு தொடங்கியது
ஜூலை 09, 2024
Advertisement
காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தாலும் யோகி பாபு கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சிம்பு தேவன் இயக்கத்தில் அவர் கதை நாயகனாக நடித்துள்ள "போட்" படம் அடுத்து வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் கதை நாயகனாக நடிக்கும்படம் "கான்ஸ்டபிள் நந்தன்". இந்த படத்தின் பணிகள் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.
யோகிபாபு ஏற்கனவே பல படங்களில் கான்ஸ்டபிளாக நடித்திருந்தபோதும் கதை நாயகனாக நடிப்பது இதுவே முதல்முறை. படத்தை சங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி.சங்கர் திருவண்ணாமலை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர், என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி. பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகிபாபு போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. "கான்ஸ்டபிள் நந்தன்" திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகிபாபுவுக்கு எதிராக ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!