
ரூ.50 கோடி வசூலில் கட்டா குஸ்தி 2
கடந்த வாரத் திங்களன்று இப்படம் 44 கோடியே 50 லட்சம் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். கடந்த ஒரு வாரத்தில் இப்படம் சுமார் 6 கோடி வசூலைத் தொட்டு தற்போது 50 கோடி வசூல் பெற்றுள்ளதாம்.
3வது வாரத்திலும் உலக அளவில் 450 தியேட்டர்களில் படம் ஒடிக் கொண்டிருக்கிறது என இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த வருடத்தில் 50 கோடி வசூலைக் கடந்துள்ள 8வது படமாக "கட்டா குஸ்தி 2" இடம் பிடித்துள்ளது. வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!