பேயாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்
ஏப் 18, 2023
Advertisement
மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படம் "சைத்ரா". இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஜெனித்குமார் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: 24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. இதில் யாஷிகா ஆனந்த் பேயாக நடித்துள்ளார். அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. பேய் படம் என்றாலும் வழக்கமான காட்சிகள் இன்றி புதுமையான முறையில் இதனை படமாக்கி உள்ளதோடு. ஒரு முக்கியமான விஷயம் பற்றியும் படம் பேசுகிறது. பேய் இருக்கிறதா? இல்லையா என்ற விவாவத்தையும் முன் வைக்கிறது. என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!