பெற்றோருக்கு நடுவில் உறங்கும் விஜய் தேவரகொண்டா : வைரலான ராஷ்மிகா எடுத்த புகைப்படம்
ஆக 22, 2026
Advertisement
சமீபநாட்களாக ஆந்திராவில் சில இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நடிகர் விஜய் தேவரகொண்டாவின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிடைத்த ஓய்வைத் தன் பெற்றோருடன் செலவிட, அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளார் விஜய் தேவரகொண்டா. அப்போது தனது சிறு வயது ஞாபகங்கள் நிறைந்த, தனக்குப் பிடித்தமான இடத்தில் தனது பெற்றோரின் நடுவே படுத்து உறங்குவது போன்று சமீபத்தில் ஒரு புகைப்படத்தை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தை எடுத்தவர் தனது மனைவி ராஷ்மிகா மந்தனா தான் என்கிற கிரெடிட்டையும் அவருக்கு கொடுத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
இது குறித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில், "வீட்டிற்கு வந்ததும் என் கோபமான முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதற்காக மட்டும்தான் எனக்கு போட்டோ கிரெடிட் கொடுத்தாயா? கடந்த சில ஆண்டுகளாக நான் எடுத்த அத்தனை போட்டோக்களுக்கும் சேர்த்து நீ எனக்கு கிரெடிட் தருவாயா? எனது போட்டோகிராபி திறமை எவ்வளவு அருமையானது என்பதை என் அன்பானவர்களுக்கு நான் காட்ட வேண்டாமா? சும்மா சொன்னேன்" என்று விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!