
இந்திய நடிகர்களில் புதிய சாதனை படைத்த யஷ்
"கேஜிஎப் 2" படம் வெளியான கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரூ.50 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. 2018ல் புரிந்த அந்த சாதனையை 8 வருடங்களுக்குப் பிறகு ‛ராமாயணா" படம் மூலம் மீண்டும் இரண்டாவது முறையாகப் படைத்துள்ளார் யஷ். வேறு எந்த ஒரு இந்திய நடிகரும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை.
நவம்பர் 5ல் வெளியான ஹிந்திப் படமான "ராமாயணா" படம் உலக அளவில் ரூ.1400 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும், ஹிந்தியிலும் ஏற்கனவே இந்த படம் 50 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
அனைத்து மொழிகளிலும் ரூ.50 கோடி, உலக அளவில் இரண்டாவது ரூ.1000 கோடி என "ராமாயணா" மூலம் சாதனை படைத்திருக்கிறார் யஷ். "டாக்சிக்" படத்தின் தோல்வியை "ராமாயணா" வெற்றி, வசூல், வரவேற்பு மூலம் தன் இமேஜை பல மடங்கு உயர்த்தியுள்ளார் யஷ்.
"ராமாயணா" தந்த வெற்றி மூலம் கன்னடத்தில் அடுத்து சரியான ஒரு படத்தை யஷ் தேர்வு செய்வார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கு வந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…