விஜய் ரசிகர்களிடம் சிக்குமா டிஎன் 2026 ?
ஏப் 04, 2026
Advertisement
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி, தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், இளவரசு மற்றும் பலர் நடிக்கும் படம் "டிஎன் 2026". இப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம் நடிகர் விஜய்யை சித்தரிப்பதாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பரவலான கருத்து எழுந்தது. விஜய்யின் நிஜ வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி படத்தில் காட்சிகள் இருக்கலாம் என்பதை டிரைலரில் இடம் பெற்ற காட்சிகளும் உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.
இதனிடையே நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் உமாபதி, நடிகர்கள் நட்டி, தம்பி ராமையா ஆகியோர் இந்தப் படம் யாரையும் காயப்படுத்தாது என்று உறுதியாகப் பேசினர். இருந்தாலும் எழுந்த சர்ச்சை அடங்கிப் போவதற்காக அவர்கள் இப்படிப் பேசியிருக்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் சமயத்தில் இந்தப் படம் ஒரு "ஸ்பூப்" படமாக இருந்தாலும் கூட அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" படம் வெளிவராமல் இருக்கும் நேரத்தில் இந்த "டிஎன் 2026" படத்தில் விஜய் பற்றிய சர்ச்சைக் காட்சிகள் இருந்தால் அந்தப் படத்தை "டிரோல்" செய்ய விஜய் ரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.
இந்த வருடப் பொங்கலுக்கு விஜய்யின் "ஜனநாயகன்" போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த "பராசக்தி" வரும் என்று சொன்னதற்கே அந்தப் படத்தைப் பற்றி பல நெகட்டிவிட்டியை ஏற்படுத்தினர். அது "டிஎன் 2026" படத்திற்கும் நடக்குமா என்பது அடுத்த வாரம் தெரியும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!