
மைக்கேல் கைவிட்டாலும் டக்கராக வருவாரா திவ்யன்ஷா?
தற்போது அவர் ஏற்கெனவே நடித்து முடித்த "டக்கர்" படம் வருகிற 9ம் தேதி வெளிவருகிறது. இதில் அவர் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கி உள்ளார். பணத்தை தேடி ஓடும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனும், பணமே வேண்டாம் என்று கருதும் ஒரு கோடீஸ்வர பெண்ணும் ஒரு கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதாக சொல்லப்படும் ரோட் மூவி இது. மைக்கேல் படத்தின் தோல்வியால் சோர்ந்திருக்கும் திவ்யன்ஷா கவுசிக் டக்கராக வருவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!