கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே திருமணம் : தமிழ் தயாரிப்பாளரை மணந்தார்
ஜூலை 20, 2026
Advertisement
முன்னணி கன்னட நடிகை சர்மிளா மந்த்ரே. 2007ம் ஆண்டு "ஷாஜினி" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2012ல் வினய் ராய் நடித்த "மிரட்டல்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது தமிழில் "அதிர்ஷ்டசாலி" என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நடித்துள்ள அவர், தமிழில் விமல் நடித்த "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு", விமலுடன் ஸ்ரேயா நடித்த "சண்டக்காரி", அட்டகத்தி தினேஷ் நடித்த "நானும் சிங்கிள் தான்" ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
ஷர்மிளாவிற்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரத்துக்கும் காதல் இருந்தது. விஜய்சேதுபதி நடித்த "மஹாராஜா", ஜெயம் ரவி நடித்த "இறைவன்", சித்தார்த் நடித்த "டக்கர்", "பார்க்கிங்" உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தற்போது "மிஸ்டர் பாரத்", "பென்ஸ்" ஆகிய படங்களை தயாரிக்கிறார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம். கடந்த மாதம் பெங்களூருவில் நடந்தது. இந்நிலையில், சர்மிளா மந்த்ரே, சுதன் சுந்தரம் திருமணம் ராஜஸ்தான் அரண்மனையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டனர். திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சர்மிளா மந்த்ரே, "இப்போது நான் மிஸஸ் சுந்தரமாகிவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!