
நடிப்பு இல்லாமல் இயக்கம் ஏன்...? : முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அளித்த பதில்
இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்வு துவங்கி உள்ளது. ஜேசன் அளித்த பேட்டியில் நடிக்காமல் இயக்கம் தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து அவர் கூறியதாவது, ‛‛சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு பழக்கம் உள்ளது. கதை சொல்வது ரொம்ப பிடிக்கும். அது படக் கதையாக கூட இருக்க வேண்டியதில்லை. அது நண்பர்களுடன் பேசுவதாக கூட இருக்கலாம். எனக்கு எழுதும் பழக்கமும் உள்ளது. எனக்கு தோணும் விஷயங்களை எழுதியோ, டைப் செய்தோ வைத்துக் கொள்வேன். இந்த பழக்கத்திற்கு பிறகு தான் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதை முறையாக செய்யலாம் என டொரோண்டோவில் ஒரு பிலிம் ஸ்கூலில் அதற்கான படிப்பை படித்தேன். பிலிம் மேக்கிங் உடன் அது தொடர்புடைய எல்லா துறைகளையும் சேர்த்து இருந்தது. அப்போது தான் நான் எதை தொடர வேண்டும் என்பதை அறிந்தேன். முன்னதாக எனக்கு பைலட் ஆகணும் ஆசை இருந்தது, அப்புறம் கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது"" என்றார்.
மேலும் ஹாலிவுட்டில் இருந்து நடிகர் ஜேசன் ஸ்டேதம் உங்களை அழைத்து ஒரு படம் இயக்க சொல்லி உடன் இந்தியாவில் இருந்து ஒரு நடிகரை அழைத்து வரச் சொன்னால் யாரை அழைப்பீர்கள் என்ற கேள்விக்கு, என் அப்பா தான். இருவரும் கோட் சூட் போட்டு நடித்தால் நல்ல காம்பினேஷனாக இருக்கும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!