
இந்தியாவின் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் ; எஸ்.ஜே. சூர்யாவின் லட்சியம்
அஜித் நடித்த "வாலி", விஜய் நடித்த "குஷி" என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா. ஒரு கட்டத்தில் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தானே ஹீரோவாக மாறி சில படங்களில் நடித்தார். பின்னர் டைரக்ஷனை ஒதுக்கி வைத்துவிட்டு, சமீப வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திரம் என ஹீரோவுக்கு இணையான முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தனது நடிப்புக்கு என தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி வைத்துவிட்டார்.
அதே சமயம், இத்தனை வருடமாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருக்கும் எஸ்.ஜே. சூர்யாவிடம் சமீபத்தில் அது குறித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, அதற்கு ஒரு ஆச்சரியமான பதில் ஒன்றை கூறினார். அதாவது, தனக்கு மிகப்பெரிய லட்சியம் ஒன்று இருப்பதாகவும், அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதால் திருமணம் செய்யும் எண்ணமே ஏற்படவில்லை என்றும் கூறியவர், இந்தியாவின் எம்.ஜி.ஆர். ஆவதுதான் அந்த லட்சியம் என்றும் ஒரு ஆச்சரிய தகவலைக் கூறினார். "நான் அதை அடைவேனா, அடையாமலேயே போவேனா என்பது பற்றித் தெரியாது, ஆனால் அந்த லட்சியத்தை நோக்கித்தான் என்னுடைய பயணம் இருக்கும்" என்றும் கூறியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!