பிளாஷ்பேக்: டிராப் ஆன எம்ஜிஆர் படத்தை மீண்டும் எடுத்த ஜேப்பியார்
செப் 16, 2026
Advertisement
எம்ஜிஆர் நடித்த "அண்ணன் என் தெய்வம்" என்ற படம் அவர் முதல்வராகி விட்டதால் பாதியில் நின்று போனது. அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்தி கே.பாக்யராஜ் "அவசர போலீஸ் 100" என்ற படத்தை இயக்கினார். இதே போன்று இன்னொரு நிகழ்வும் நடந்தது.
எம்ஜிஆரின் நெருக்கமான நண்பராக இருந்தவர் ஜேப்பியார். பின்னாளில் பெரிய கல்வியாளர் ஆனார். இவர் 1977-ல் எம்.கர்ணன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து பாதியில் நின்ற "நல்லதை நாடு கேட்கும்" என்ற படத்தின் காட்சிகளை வைத்து அதே பெயரில் புதிய படம் ஒன்றை அதே பெயரில் இயக்கினார். எம்ஜிஆர் நடித்த காட்சிகளை பிளாஷ் பேக் காட்சிகளாக வைத்துக் கொண்டு நிகழ்கால காட்சிகளில் எம்ஜிஆரின் தொண்டராக ஜேப்பியாரே நடித்து அவர் விட்டுச் சென்ற பணிகளை இவர் முடிப்பபோது படம் உருவானது.
எம்ஜிஆர் மறைந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. என்றாலும் ஜேப்பியார் நாயகனாக நடித்த ஒரே படம் என்ற வகையில் இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது. எம்ஜிஆருடன் எஸ்.வி.சுப்பையா நடித்திருந்தார். ஜேப்பியாருடன் பத்மப்பிரியா, ரேகா, ராஜேஷ், செந்தில், கவுண்டமணி, ஜெய் கணேஷ், கவுதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!