
மகனுக்கு வழிவிட்ட தந்தை
இந்த நிலையில் இதே தேதியில் விஜய் நடித்த "திருப்பாச்சி" படம் மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய் - த்ரிஷா நடித்து 2005ம் ஆண்டு வெளியான படம் இது. பேரரசு இயக்கி இருந்தார். விஜய்- த்ரிஷா நடித்த "கில்லி" மறுவெளியீட்டிலும் வசூல் சாதனைப் படைத்ததால் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இதன் மறுவெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி படத்தை வெளியிடும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய சூழலில், பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதால், அந்தப் படைப்புகளை ஊக்குவிக்கவும், தமிழ்த் திரையுலகின் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும், "திருப்பாச்சி" படத்தின் மறுவெளியீட்டைச் சிறிது காலத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!