
சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம்
இந்த நிலையில் சசிகுமாருடன் ஜோடியாக நடித்தது பற்றி சிம்ரன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “நல்ல குடும்ப கதையாக இருப்பதால் "டூரிஸ்ட் பேமிலி" படத்துக்கு உடனடியாக ஓ.கே. சொன்னேன். இன்னொரு காரணம், சசிகுமார். அவர் ஒரு மிகப்பெரிய டைரக்டர் மற்றும் நடிகர். அவருடன் நடிப்பது எனக்கு பெருமை தான். சினிமாவில் ஜூனியர், சீனியர் என்ற பேதம் கூடாது. திறமைக்கு முதலிடம். அந்தவகையில் சசிகுமாருடன் இணைந்து நடிப்பதை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். இனி அடுத்தடுத்து குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!