
பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம்
1936ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் "சம்சார நொகே". இந்த படத்தின் கதை சினிமா ஆவதற்கு முன்பே நாடகமாக நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னையில் கன்னடர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தது. சுமார் 4 ஆயிரம் முறை நடத்தப்பட்ட நாடகம் என்று இதனை குறிப்பிடுவார்கள்.
கன்னடத்தில் இந்த நாடகம், சினிமாவாகி பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலு, எம்வி.ராஜம்மா, கிருஷ்ணமூர்த்தி, பத்மாவதி, எம்.எஸ்.மகாதேவ ராவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஹெச்.எல்.என்.சிம்ஹா இயக்கி இருந்தார்.
இந்த நாடகம் சென்னையில் புகழ் பெற்றிருந்ததால் 1948ம் ஆண்டு இந்த படத்தை 33 ஆயிரம் ரூபாய் செலவில் தமிழ் படமாக்கி வெளியிட்டனர். படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதியில் மட்டும் வெற்றிகரமாக ஓடி 2லட்சத்து 50 ஆயிரம் வசூலித்தது. இது அப்போது பெரிய வசூல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!