
ஜனநாயகன் எப்போது ரிலீஸ் : வினோத் கொடுத்த பதில்
மே 30, 2026
Advertisement
வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விஜயும் முதல்வராக உள்ளார். விரைவில் தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இப்படியான நிலையில், இப்படத்தின் இயக்குனர் வினோத்திடம் ‛ஜனநாயகன்" படம் எப்போது திரைக்கு வருகிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர், வரும் போது வரும். அதை என்னால் இப்போது உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வேலை நடக்கிறது"" என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!