அட்லீயின் அடுத்த பிளான் என்ன ?
ஆக 03, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. அப்படியே ஹிந்திப் பக்கம் சென்று ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்க "ஜவான்" படத்தை இயக்கி 1000 கோடி வசூலைப் பெற்று வியக்க வைத்தார்.
"ஜவான்" படம் வெளிவந்து ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அவருடைய அடுத்த படத்தின் நாயகன் யார், தயாரிப்பு நிறுவனம் யார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்தது. அதற்கடுத்து ஹிந்தி நடிகர் சல்மான் கான் நடிக்கப் போகும் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் என்று சொன்னார்கள். ஆனால், எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது தனது மும்பை அலுவலகத்தில் உதவியாளர்களுடன் அடுத்த படத்திற்கான கதையின் இறுதி வடிவத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறாராம். அதை முடித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அந்தப் படம் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்பது தற்போதைய தகவல்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!