ஹாரர் படத்தில் விமலா ராமன்
மார் 14, 2023
Advertisement
கடந்த ஆண்டு "கிராண்ட்மா" படத்தில் நடித்த விமலா ராமன் இந்த ஆண்டு "அஸ்வின்ஸ்" என்ற சைக்காலஜிக்கல் ஹாரர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரிக்கிறார்.
இந்த படத்தை ஜெர்மனில் வசிக்கும் தமிழரான தருண் தேஜா இயக்குகிறார். பல குறும்படங்களை இயக்கிய தருண் தேஜாவின் பெரும் வரவேற்பை பெற்று குறும்படமான "அஸ்வின்ஸ்" தற்போது திரைப்படமாகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு ரகசியத்தை தேடிச் செல்லும் யுடியூபர்கள் அந்த ரகசியத்தின் சாபத்திற்குள் சிக்கி கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!